பாடசாலை கீதம்
வாழ்கவே வாழ்கவே வாழ்கவே
விபுலாநந்த வித்தியாலயம் வாழ்கவே
இது வாழிய வாழிய வாழிய என்று
வாழ்த்தி வணங்கிடுவோம்
(வாழ்கவே......)
முத்தமிழ் வித்தகராம் விபுலாநந்தர்
நாமத்தை கொண்டிலங்கி
நற்றமிழ் கற்று நல்லோராக வாழ்ந்திட
நல்விதை விதைப்பதிது
(வாழ்கவே......)
அலைகடலும் அகழ் வாவியும்
அணிசெய்யும் அழகிய கல்லடியில்
நிலைபெறும் முகத்துவாரத்திலே
புகழ் நிலைத்திடும் வித்தியாலயம்
(வாழ்கவே......)
திருச்செந்தூர் முருகன் கோவில் கொண்ட
இடம் கல்லடி முகத்துவாரம்
இங்கு எழுச்சியோடு பல கலை கற்றிடவே
உதவிடும் வித்தியாலயம்
(வாழ்கவே......)
ஆண்டவன் அருளும் அறிஞர்கள் ஆசியும்
அனுதினம் பெற்றிடுவோம் நம்மில்
கண்ணியம் கடமை கட்டுப்பாட்டுடன்
கற்று மகிழ்ந்திடுவோம்
(வாழ்கவே......)